Wednesday 15 November 2017

சங்கரானந்தம் 9 - 14.12.2017

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர .  பெரியவா சரணம்.

சங்கரானந்தம் 9    -   14.12.2017

மஹா பெரியவாளின் அருட்கடாட்சத்தினால் 30.12.2012 முதல் இன்று வரை இச்சிறியேனுக்கும்  அருள் செய்யும் பொருட்டு என்னை எழுதுகோலாக பயன்படுத்தி மஹா பெரியவாளின் மஹிமைகளை 700க்கும் மேற்பட்ட பாடல்களை மஹா  ஸ்வாமிகளின் பக்தர்களுக்காக   எழுத அருள் புரிந்துள்ளார்.  (மற்ற தெய்வங்களுக்கு 1500 பாடல்களுக்கு மேல் மலர்ந்துள்ளது.) இப்பாடல்களை  சங்கரானந்தம்  என்னும் தலைப்பில் மஹாஸ்வாமிகளின் பேரருளால் 8 தொகுதிகளாக இது நாள் வரை   மஹாஸ்வாமிகளின்  ஜெயந்தி  மற்றும் ஆராதனையின் போது   90,000  பிரதிகளுக்கு மேல் பதித்து இலவசமாக மஹா பெரியவாளின் பக்தர்களுக்கு வழங்கி மகிழும் நல்வாய்ப்பினையும் அளித்துள்ளார் .

தற்போது மஹாஸ்வாமிகளின்   ஆராதனை மஹோத்ஸவ நாளான 14.12.2017 அன்று  சங்கரானந்தம்   9வது தொகுதியாக   25 பாடல்களை  புத்தக வடிவில் 15,000 பிரதிகள் பதித்து மஹா ஸ்வாமிகளின் அருட்பிரசாதமாக மஹா பெரியவாளின்  பக்தர்களுக்கு  இலவசமாக வழங்கி மகிழ மஹாஸ்வாமிகளின் பாதார விந்தங்களை பணிந்து ஆசி கோருகிறேன்.
  
மஹா பெரியவாளின் பக்தர்களாகிய தாங்களும் இப்பெரும் குரு கைங்கர்ய பணியில் ஈடுபட விரும்பினால்  குறைந்த பட்சம்   தலா ரூ.108/- அனுப்பினால் கூட போதும்.     தங்களுக்கு சங்கரானந்தம்  8 மற்றும் 9 வது தொகுதிகளை    தபாலில் சேர்ப்பிக்கிறேன்.  இந்த நன்கொடையினால் 11 மஹா பெரியவாளின் பக்தர்களின் பூஜை அறையில் சங்கரானந்த பாடல்கள் புத்தகத்தை சேர்த்த புண்ணியம் உங்களுக்கு உரியதாகும்.  

ரூ.200க்கு மேல் குரு காணிக்கை அளிக்கும் அன்பர்களுக்கு சங்கரானந்தம்  7, 8 மற்றும் 9 வது தொகுதிகளும்  மஹா பெரியவாளின் அஷ்டோத்திரம், கராவலம்ப ஸ்தோத்திரம் மற்றும்  100 சங்கரானந்த பாடல்கள் கொண்ட ஒரு  Vocal CDயும்  Courier ல் அனுப்பி வைக்கப்படும்.  

ஊர் கூடி தேர் இழுத்தல் போல தமிழ் சொற்களால் அக்ஷர மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சங்கரானந்தத் தேரை அனைத்து இல்லங்களுக்கும் சென்றடைய தங்களால் இயன்ற பொருளுதவியை செய்து குருவருள் பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

சங்கரானந்தம் - 7  மற்றும் 8வது தொகுப்பின் பாடல்களை கேட்து மகிழ, சொடுக்கவும் :

www.soundcloud.com/user-759313743


 மேலும் சில அனைத்து தெய்வங்களை பற்றிய அடியேனின் பாடல்களை கேட்க , சொடுக்கவும் :
உங்களுக்குத் தெரிந்த மஹா பெரியவாளின் பக்தர்களின் முகவரிகளை தெரிவித்தால் அவர்களுக்கும் சங்கரானந்தம் - 9 வது தொகுப்பினை தபாலில் அனுப்பி வைக்க கடமை பட்டுள்ளேன். 
மஹா பெரியவாளின் 15,000 பக்தர்களுக்கு இப்புத்தகம் சென்றடைய தங்களின் குரு காணிக்கைகளை  கீழ் காணும் முகவரிக்கு   M.O.  செய்யலாம்.  

Smt. S. Thanuja Shankar,

104 Aravind Nagar , Madambakkam, Chennai - 600 126.

Those who wish to transfer through bank for this Guru Kainkaryam,  kindly  whatsapp or SMS to 99404 47 437. 

I will send the bank account details. 

Please see my songs at : www.songsbyshanks.blogspot.in

For daily Holy slokas(posted on 1st of every month) visit :

www.aanmeegaula.blogspot.in


இறைபணியில் என்றென்றும்  ,

தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்                  

மாடம்பாக்கம்.

Wednesday 7 June 2017

songs by Madambakkam dhenupureeswara dhaasan Shankar

LISTEN TO all devotional songs at :

https://soundcloud.com/madambakkamshanks


Sankaranandham - Vol 7 songs (25.12.2016)  at :

https://soundcloud.com/lakshmikanthan-shankar


Sankaranandham - Vol. 8 Songs (08.06.2017) at :

https://soundcloud.com/user-759313743

Thursday 4 May 2017

மஹாபெரியவா ப்ராதஸ்மரண பூர்வக கராவலம்ப ஸ்தோத்ரம்

ப்ராதஸ்மரண பூர்வக கராவலம்ப ஸ்தோத்ரம்

|| ஸ்ரீ குருப்யோ நம: ||

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம், ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய கராவலம்ப ஸ்தோத்ரம், முதலியவை மிகவும் ப்ரசித்தமானவை. அதேபோல் ஆசார்ய பக்த ஸ்ரேஷ்டரான "ஸரஸ கவி" ஸ்ரீ லக்ஷ்மீகாந்த சர்மா நமது பரமாசார்யர்களின் மேல் பாடியிருக்கிறார்கள். ப்ராதஸ்மரணீய மஹாபுருஷர்களான ஸ்ரீ ஆசார்யர்களை காலையில் ஸ்மரித்து இந்த ஸ்தோத்திரத்தை சொல்வது மிக்க மிக்க க்ஷேமகரம்.

            ப்ராதஸ்மராமி பவதீய முகாரவிந்தம்
            மந்தஸ்மிதம் ச ஜனிதாபஹரம் ஜனானாம்
            சம்பத்கரீம் ச பவதோத்ர கடாக்ஷலக்ஷ்மீம்
            காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்


திருமுகத்தின் அழகு பவத்தை நீக்கும். குறுநகை பிறந்திட மக்களின் பிறவிப் பிணி தீர்ந்துவிடும்அருள்விழிப் பார்வையாலே பவவினை ஒழிந்து செல்வத்தை அருளும். இந்தக் குணாதிசயங்கள் நிறைந்த காஞ்சி மடத்தின் அதிபதியைக் காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன்என்னைக் கைத்தூக்கி அருளுமாறு வேண்டுகிறேன்.

ப்ராதஸ்மராமி கலிதோஷ ஹராணி யாணி
ஹ்ருத்யானி த்வய மதுராணி மனோஹராணி
வாக்யானி தேத்ய வதனாம் புஜ நிர்கதானி
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்

கலிதோஷத்தை நீக்குபவரே!  அருளிதயம் கொண்டுஅங்கிருந்து பிறக்கும் தங்கள் தேமதுரமான வாக்கின் மூலம் எங்கள் இதயத்தை மலரச் செய்பவரே!  கதியற்றவரை தாமரை போன்ற அருள் விழிகளால் கடைத்தேற்றுபவரே!  காஞ்சி மடத்தின் அதிபதியே! காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன்.  கை தூக்கி  எனக்கருளுங்கள்.

வக்ஷஸ்தலம் விமலஹேம சமான வர்ணம்
பஸ்மாங்கிதம் ஜனமனோஹர குங்குமார்தம்
ப்ராதஸ்மராமி பவதோத்ர சிரம் மஹாத்மன்
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்

க‌ல‌ப்ப‌ட‌ம‌ற்ற‌த் த‌ங்க‌த்தைப் போன்றப் பொன்னிறமானத் திருமார்பு முழுவதும் திருவெண்ணீற்றாலும்குங்குமத்தாலும் பூசி [பார்க்கின்ற‌] ஜ‌னங்க‌ளின் ம‌ன‌தை இனிமையாக்குப‌வ‌ரே! எனது ப‌வ‌வினை தீர்ந்து என்னை மேலுய‌ர்த்திச் செல்ல‌க் காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன். காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே!  கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌

மத்தேவ துல்ய கமனம் ச நிரீஷ்ய தேத்ய
யாத்வா வனாந்தர மனந்த கஜாச்சலீன:
ப்ராதஸ்மராமி கஜராஜ கதிம் தவேதம்
காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

ந‌டையிலும்கூரிய‌ பார்வையிலும்வ‌ன‌ங்க‌ளில் திரிவ‌திலும் ம‌த்த‌க‌ஜ‌த்தை ஒத்த‌வ‌ரே! க‌ஜ‌ராஜ‌னுக்கு ந‌ற்க‌தி அளித்த‌துபோல‌ என‌க்கும் ந‌ல்கிடகாலையிலே நினைத்துத் துதிக்கின்றேன்.காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே!  கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌

தக்க்ஷேண தண்ட மவலப்ய ஸதைத்யரேண:
ஹஸ்தேன சாரு கலசம் ச விராஜ மானாம்
ரக்தாம்பரம் ச தவசாரு கடீஸ்மராமி
காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

வ‌ல‌க் க‌ர‌த்தில் த‌ண்ட‌மும்இட‌க் க‌ர‌த்தில் கமண்டலத்தையும் தாங்கிஒளிர்கின்ற‌ ர‌க்த‌ வ‌ர்ண‌ மேலாடையை அணிந்து நிற்கும் திருக்கோல‌த்தை நினைத்துத் துதிக்கின்றேன். காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌.

விஸ்ம்ருத்ய தோஷமகிலம் ச மமாப்ராதும்
த்ராதும் ச யாத்ய பகவன் க்ருதபத்த தீக்ஷா:
ப்ராதஸ்மராமி யதிபுங்கவ தேனுகம்பாம்
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்

குறைக‌ளைதோஷ‌ங்க‌ளை எல்லாம் ம‌ற‌ப்ப‌வ‌ரே! குற்ற‌‌ங்க‌ளை எல்லாம் ம‌ன்னிப்ப‌வ‌ரே!அனைத்தையும் பொறுத்து ப‌க்த‌ர்க‌ளுக்கு அருட்பார்வை அளிக்கின்ற‌ ப‌க‌வானே!அருட்பாலைப் பொழிகின்ற‌ உத்த‌ம‌மான‌ ப‌சுவைப் போன்ற‌வ‌ரே!  காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌

ப்ராதஸ்மராமி பவதீய பதாரவிந்தம்
யஸ்மாத் ப்ரயாந்தி துரிதாணி மஹாந்தி தாணி
ஆயாந்தி தாணி முஹரத்ய சுமங்களானி
காஞ்சீ மடேச மம தேஹி கராவலம்பம்

எந்த மஹானுடைய திவ்ய சரணார விந்தங்களைத் துதித்தால்,  அனைத்து விதமான மஹா துன்பங்களும் ஓடிவிடுமோ,  ஸர்வ மங்களங்களும் தேடி ஓடிவருமோஅத்தகையப் பெருமை வாய்ந்த] காஞ்சி மடத்தின் அதிபதியே!  கைதூக்கி எனக்கு அ‌ருளுங்கள்.

ஸ்னானாச்ச பானாச்ச நிஷேவனாச்ச
த்யானாச்ச பாபநி லயம் ப்ரயாந்தி 
ஹே தீர்த்த பாதானுஸவம் பதம் தே
தீர்த்தம் ச தீர்த்திகரணம் பஜாமி
காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

குளிக்கும்போதும்உண்ணும் [குடிக்கும்] போதும்தனியே துதிக்கும்போதும்தியானம்புரியும்போதும், [எந்த] தீர்த்தபாதரை நினைத்துத் துதித்தால் ஸர்வ பாபங்களும் விலகிஓடிவிடுமோ,  [அவரை நினைந்து]ஸர்வ பதம் தந்தருள்க என வேண்டிநல்வழி காட்டுக என இந்தத் தீர்த்தத்தால் துதிக்கிறேன். காஞ்சி மடத்தின் அதிபதியே! கைதூக்கி எனக்குஅ‌ருளுங்கள்.


அற்புதமான இந்த ஸ்லோகத்தினை முழுமனதோடு லயித்து அனுதினம் காலையில் பாராயணம் செய்ய ஸர்வ வல்லமை பொருந்திய ஸ்ரீமஹாஸ்வாமியின் அருள் கிட்டுவது திண்ணம்.  எனது வாழ்வில் நான் அனுபவித்த மஹிமை இது.

Thursday 29 December 2016

SANKARANANDHAM 7 RELEASED ON 25.12.2016 ON 23RD AARAADHANA OF MAHAPERIYAVA

Shivaya Namaha,

SANKARANANDHAM 7 , released on 25.12.2016 . 

pdf copy :


Listen to some of the songs of SANKARANANDHAM 7 in the following link :

https://soundcloud.com/lakshmikanthan-shankar


Listen to some of the songs written for all Gods during 2012-2015 :

https://soundcloud.com/madambakkamshanks


SOME SONGS OF DECEMBER 2016